கோடைகாலத்தில் குளிர்ச்சியான சருமத்தை பெறுவதற்கான குறிப்புகள் Tips for getting cool skin in summer
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
கோடைகாலத்தில் குளிர்ச்சியான சருமத்தை பெறுவதற்கான குறிப்புகள்..
கோடைகாலத்தில் தான் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும் வெயிலில் சிறிது நேரம் வெளியே சென்றாலே, சருமம் பயங்கரமாக எரியும். அதோடு, கோடையில் தான் பருக்கள், வெட்கை போன்ற சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே கோடைகாலத்தில் விலைக்குறைவாக கிடைக்கும் தர்பூசணியைக் கொண்டு சருமத்திற்கு (ஃபேஸ் பேக்) போட்டு வந்தால், கோடையில் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி இங்கு காண்போம்.
தர்பூசணி மற்றும் தயிர் ;
👉 கோடைகாலத்தில் தர்பூசணி பழச்சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால் பொலிவான மென்மையான சருமத்தைப் பெறலாம்.
தர்பூசணி மற்றும் வாழைப்பழம் ;
👉 வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் தர்பூசணி பழச்சாறு கலந்து, முகத்தில் மட்டுமின்றி கை, கால் முழுவதும் தடவி, ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் தடுக்கப்படுகிறது.
தர்பூசணி மற்றும் பால் பவுடர் ;
👉 பால் பவுடர் மற்றும் தர்பூசணி சாறு சேர்த்து திரவ கெட்டியாக செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இதனால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
தர்பூசணி மற்றும் தேன் ;
👉 கோடைகாலத்தில் சரும வறட்சியை போக்குவதற்கு தர்பூசணி சாறுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகிறது.
தர்பூசணி மற்றும் அவகேடோ ;
👉 சருமத்தில் வெளிப்படும் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க, அவகேடோவை அரைத்து அதில் தர்பூசணி பழச்சாறு ஊற்றி கலந்து, சருமத்திற்கு போட வேண்டும்.
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ;
👉 வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி அரைத்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சரும எரிச்சலையும் தடுக்கிறது.
நன்றி........
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "கோடைகாலத்தில் குளிர்ச்சியான சருமத்தை பெறுவதற்கான குறிப்புகள் Tips for getting cool skin in summer"
கருத்துரையிடுக