வெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...



வெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்..........



      வெள்ளரிக்காய் ஆனது பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

       வெள்ளரி விதை சரும வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது.  கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
   வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை அடக்கியுள்ளது.

       வெள்ளரி விதையை வெள்ளரிக்காயுடனோ அல்லது சமைத்து உணவாகவோ சாப்பிடலாம். மேலும் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின்- இ,  ஆன்டிஆக்சிடன்ட் போன்ற பல சத்துக்கள் வெள்ளரி விதையில் உள்ளன.


      சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

      வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை உள்ளதால், சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். 

      வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.

      புற்றுநோயைத் தடுக்கிறது.   நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது....... 


                நன்றி...............!

0 Response to "வெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்"

கருத்துரையிடுக