தலையில் நீர்க் கோர்ப்புக்கு மருத்துவம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
தலையில் நீர்க் கோர்ப்புக்கு மருத்துவம்.......!
தலைபாரம் சாதாரண விசயமல்ல. தலையில் நீர்கோர்ப்பதைத் தான் தலைபாரம் என்பார்கள். இது நம் ஒட்டுமொத்த செயல்களையும் முடக்கிவிடக் கூடியது. ஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக் கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்வதாக பலர் நினைக்கின்றனர். இவை மட்டுமே காரணங்கள் அல்ல. வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.
* நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. இதனால் வைரசு பரவுவதற்கும், பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
* தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் போது மூக்கடைப்பு, தலைபாரம், இருமல், சளித்தொல்லை போன்றவற்றோடு தொடர் தும்மலும் வரக்கூடும்.
* ஆண்களைவிட பெண்களுக்கே இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. இதை வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. மழை மற்றும் குளிர்காலங்களில் சொட்டர், தலையை முழுவதும் மூடக்கூடிய தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்கு காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனசு வகைகளில் ஒன்றான (Sinusitis) பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும், அலர்சி காரணமாகவும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து பின் சிகிச்சையை எடுக்க வேண்டும்.
எளிய வைத்திய முறைகள் :
1. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். தலைபாரமாக இருக்கும் போது ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம்,
2. நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
அல்லது,
நல்லெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் தும்பைப்பூ சாறு சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைபாரம் தலைவலி தீரும்.
3. தலைபாரத்தை அவ்வப்போது உணர்பவர்கள் இரவு படுக்கும் போது கற்பூரவல்லி 1 இலை, துளசி 5 - 6 இலைகள், வெற்றிலை ஒன்று, சுக்கு 1 சிட்டிகை, மஞ்சள் பொடி 1 சிட்டிகை சேர்த்து அரைத்து நெற்றி, உச்சந்தலை, பிடரி, மூக்கின் இருபுறமும், கழுத்து பகுதியிலும் பற்று போட வேண்டும். காலை இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். இதனால் தலையில் இருக்கும் அத்தனை நீரும் வெளியேறும். மறுநாள் காலை எழும்போதே தலை இலேசாக மாறியிருப்பதை உணரலாம்.
4. யூகலிப்டசு இலை, வேப்பிலை, புதினா, துளசி கற்பூரவல்லி இலைகளையும் தலா 10 சேர்த்து நீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்க இரண்டு நாளில் தலையின் உள்ளிருக்கும் நீர் அனைத்தும் வெளியேறி தலைபாரத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
தலைவலி, தலைபாரத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் முறை :
வெறும் மண் சட்டியை அடுப்பில் ஏற்றி ஐந்து நிமிடங்களுக்கு சூடு செய்து கொள்ளவும். மண் பாத்திரம் சூடேறியதும் அதன் மீது ஒரு காட்டன் துணியை உருட்டி அதன் மீது வைக்கவும். உங்களால் பொறுக்கும் அளவுக்கு சூடு ஏறிய பின்பு தலைவலி என்றால் தலையிலும் தலைபாரம் என்றால் தலை, முகம் மற்றும் நெஞ்சு பகுதியிலும் இந்த ஒத்தடத்தை கொடுக்கவும்.
இந்த சூடு உங்கள் உடலில் ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் எல்லா வெளியேறி வியர்க்க ஆரம்பிக்கும், வலி குறையும். இதனை தொடர்ந்து மூன்று முறை செய்யும் போது நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
தலையில் நீர்கோத்து இருந்தாலும் அந்த நீர் அனைத்தும் வெளியேறி விடும். மேலும் அதனால் உண்டாகும் தலைவலியும் சரியாகி விடும். இது மட்டும் இல்லாமல் இதனை செய்து முடித்த பின் இலேசாக உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய அற்புதமான ஒரு மருத்துவம் இது.
நன்றி............!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "தலையில் நீர்க் கோர்ப்புக்கு மருத்துவம்"
கருத்துரையிடுக