வாயுக் கோளாறில் இருந்து விடுபட
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
வாயுக் கோளாறில் இருந்து விடுபட ....................
வாயுவுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.
முக்கிய குறிப்பு :
வாயுக்கு எதிரிகள்.....!
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்சு, சோயாபீன்சு, முட்டைக்கோசு, வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிசுகட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீசு போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாயுவைக் கட்டுப்படுத்த.........!
எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.
நன்றி..........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "வாயுக் கோளாறில் இருந்து விடுபட"
கருத்துரையிடுக