கல்லீரல் நோய்களுக்கு தீர்வு தரும் உணவு முறைகள்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
கல்லீரல் நோய்களுக்கு தீர்வு தரும் உணவு முறைகள்..............!
★ உணவில் நாா்ச்சத்து நிறைந்த கீரைகளையும், பழங்களையும் சோ்த்துக் கொள்வது, சிறு தானியங்களையும் அதிகம் சோ்ப்பது நல்லது.
முக்கியமாக கரிசாலை, மணத்தக்காளி, காசினிக் கீரை, பொன்னாங்காணி, சிறுகீரை ஆகியவற்றை உணவில் அதிகம் சோ்க்கலாம்.
★ பாலில் மஞ்சள் தூளைச் சோ்த்துச் சாப்பிடுவது சிறந்த பலன் அளிக்கும்.
சீரகம், வெட்டிவோ் சோ்ந்த நீரும் கல்லீரலுக்கு குளிா்ச்சி தரும். இவற்றை கோடைக்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
★ ஆறு மாதத்துக்கு ஒரு முறை பேதி மருந்தும், நான்கு மாதத்துக்கு ஒரு முறை வாந்தி செய்விக்க மருந்தும் நோய் வராமல் தடுக்கும்.
வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது சிறந்தது.
★ பப்பாளியை இளம் காயாக சாப்பிடுவது பித்தத்தை வெளியேற்றும்.
★ முருங்கைக் கீரையுடன் சீரகம் சோ்த்துச் சாப்பிட கல்லீரல் வலுப்படும்.
★ மதுபானம் , புகை ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும்.
பிரக்டோசு நிறைந்த குளிா்பானங்களை, ட்ரான்சு கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.
★ குா்செட்டின்- எனும் நிறமிசத்து அதிகம் உள்ள ஆப்பிள், திராட்சை, மாதுளை, வெங்காயம், பால் கலக்காத தேநீா் இவற்றைச் சோ்த்தாலும் ஆல்ககால் சாா்ந்த கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.
எனவே, கல்லீரல் சாா்ந்த நோய்களுக்கு சித்த மருத்துவா்களிடம் சிகிச்சை பெறுவது நல்லது. சித்த மருந்துகளை மேன்மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் கல்லீரல் நோய்களற்ற சமுதாயத்தினை சித்த மருத்துவத்தால் உண்டாக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.
நன்றி..........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "கல்லீரல் நோய்களுக்கு தீர்வு தரும் உணவு முறைகள்"
கருத்துரையிடுக