சிறுநீரகப்பாதை தொற்றை தவிற்பதற்கான வழிமுறைகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

 சிறுநீரகப்பாதை தொற்றை தவிற்பதற்கான வழிமுறைகள்.........!


 
    ★ ஆரோக்கியம் உடைய மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரில் உப்புகள், கழிவுப் பொருட்கள் இருக்கும்.  இச்சிறுநீரில் நோய் பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை சிறுநீர் பாதை நோய் தொற்று என்கிறோம்.  

    ★ பொதுவில் இந்த தொற்று சிறுநீர் வெளி செல்லும் பாதையில் ஆரம்பிக்கும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் குழாய் வழியே பை வரை பரவும். முறையான சிகிச்சை பெறாவிட்டால் கிருமி சிறு நீரகம் வரை பரவி விடும்.

     ★ பொதுவில் சிறுநீர் சிறுநீர்ப்பையிலிருந்து கீழ் நோக்கி சென்றே வெளியேறும். இது கிருமிகளையும் வெளியேறச் செய்யும் இயற்கை அமைப்பு. ஆண்களுக்கு ‘(பாரஸ்டேட்)’ எனப்படும் சுரப்பி சில திரவங்களை சுரப்பதின் மூலம் கிருமிகள் பெருகுவதை தடுக்கும். இருப்பினும் இவைகளை மீறியே கிருமி தாக்குதல் ஏற்படுகின்றது.


    ★ சிலருக்கு அடிக்கடி சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும். சிறுநீர் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் (உம்.கல்) அந்த அடைப்பு நோய் தொற்றுக்கு காரணமாகின்றது. சில நேரங்களில் ஆணுக்கு ‘பாராஸ்டேட்’ வீக்கமடையும் பொழுது சிறுநீர் வெளியேற்றம் தேங்குகிறது. பெண்களுக்கு சிறுநீர் குழாயின் நீளம் குறைவாய் இருப்பதாலும் கிருமி பாதிப்பு எளிதாய் ஏற்படுகின்றது. கர்ப்பிணி பெண்களில் வெகு சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். அதனால் தான் சிறுநீர் பரிசோதனை அவ்வப்போது செய்யப்படுகின்றது.


    சிறுநீர் நோய் தொற்று அறிகுறிகள் :

* அடிக்கடி சிறுநீர் செல்ல தோன்றும். ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.

* சிறுநீர் துவாரம் எரியும்.

* சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.

* சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.

 * சிறுநீரில் இரத்தம் கலந்து இருக்கலாம்.

* சொரம் இருக்கலாம்.
   
 * சிறுநீர் பரிசோதனையின் மூலம் கிருமி பாதிப்பினை அறிய முடியும். பாதிப்பினை பொறுத்து மருந்துகள், ஊசி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

   * சிறுநீர் குழாய் நோய் தொற்று சில நேரங்கள் இரு சிறுநீரகங்களையும்  பாதிக்கும் பொழுது கண்பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. பல கிருமிகள் ‘ஆன்டிபயாடிக்’ மருந்திற்கு நிவர்த்தி ஆகாத எதிர்ப்பினைத் தரலாம்.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்.....?

*  நீரிழிவு பாதிப்பு உடைய ஆண், பெண் இருவருக்கும் இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  

* அதிக எடையுடைய ஆணுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.

* சிறு குழந்தைகளுக்கு எளிதாய் இப்பாதிப்பு வரலாம்.


நாம் செய்ய வேண்டியது........!

* நன்கு தண்ணீர் குடியுங்கள். இது கிருமிகளை வெளியே தள்ளிவிடும். உங்களை எளிதில் நிவாரணம் பெறச் செய்யும்.

* சிறுநீர் போக வேண்டுமெனில் உடனே சென்று விடுங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறும் பொழுதும் முன்னேற்றம் கிடைக்கும்.

* 8 அவுன்சு நீரில் ஒரு சிட்டிகை  ஆப்ப சோடா (பேக்கிங் சோடா) கலந்து காலையில் முதலாவதாக எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சல் நன்கு குறையும். ஒருவாரம் வரை கூட இதனைத் தொடரலாம். ஆனால் முக்கியமாக, உப்பு குறைத்து எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்களும், ஒவ்வாமை உள்ளவர்களும் இதனை செய்யக் கூடாது.

*  தினம் 2 தேக்கரண்டி இலவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும், சிறுநீரகப் பாதை தொற்று தீரும் வரை அருந்தலாம்.
  
     * தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.

* சாக்லேட், புளிப்பு உணவு, இவைகளை தவிர்த்து விடுங்கள்.

* கீழ் வயிற்றுக்கு மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்துக் கொள்ளுங்கள்.

* இஞ்சிசாறு, இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.

* கொழுப்பு இல்லாத தயிர், மோர் எடுத்துக் கொள்வது நல்லது.

* இளநீர் மோர், இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*  கருப்பு திராட்சையை விதையுடன் தினம் ஒரு கைப்பிடி சாப்பிடலாம் அது சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்ய உதவுகிறது.

* காரமான உணவினை, தவிர்ப்பது மிக நல்லது.

* ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் பிறப்புறுப்பை சுத்தப்படுத்துங்கள்.

  * ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட்டால் மறு முறை லேசான அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவரிடம் செல்லுங்கள். 

    * மூன்று மாதத்திற்குள் மறுபடி மறுபடி வருகின்றது என்றால் விரிவான மருத்துவ பரிசோதனையும் குறைந்த வீரியத்தில் நீண்ட கால ஆன்டிபயாடிக் இவர்களுக்குத் தேவைப்படலாம். இத்தகைய பாதிப்பு உடையவர்கள் சிலர் ஏதோ குழம்பிய மனநிலையில் கூட இருப்பார்கள். சிகிச்சை அவர்களுக்கு நல்ல தீர்வினை அளிக்கும்.




                        நன்றி.........!

0 Response to "சிறுநீரகப்பாதை தொற்றை தவிற்பதற்கான வழிமுறைகள்"

கருத்துரையிடுக