பூண்டை உபயோகப்படுத்தும் முறை
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
பூண்டை உபயோகப்படுத்தும் முறை.......……!
௧. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.
௨. நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.
௩. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.
௪. பூண்டு உடல் சூட்டை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
௫. பூண்டின் காரம் போவதற்கு சிறிது மோர் அருந்தலாம், இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய, அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
௬. தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
௭. பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
௮. பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சிய எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.
௯. காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.
௧०.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
௧௧. பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.
இதய பிரச்சினைகளுக்கு......
(ரத்தக்குழாய் அடைப்பு, கார்ட் அட்டாக், பை பாஸ் சர்சரி, ஓப்பன் கார்ட் சர்சரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்சியோ இதுபோன்ற கொடுமைகளில் இருந்து தப்பிக்க)..........,
உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற,
"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை தட்டையாக்க.......,
பச்சை பூண்டு மிக மிக சிறந்தது......!
சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல்
"சமைத்து சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு,
முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்.....!
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது....!
சமைத்தால்,
அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.
இயற்கையாகவே,
சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து
உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,
பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
★செய்முறை :
பத்து முழு பூண்டை உரித்து,
தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி,
சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம்
நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி,
குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின்,
காலை மாலை 1/2 தேக்கரண்டி பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்..........!
சாப்பிட அவ்வளவு ருசியாகவும்,
அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்.
6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர,
"எம தர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,
100 ஆவது வயதிற்குபின் வரும் மிதமிஞ்சிய ஓய்வு பட்டியலில் சேர்த்து விடுவார்.
★குறிப்பு:
இது மருந்தல்ல!
உணவு!
நன்றி.........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "பூண்டை உபயோகப்படுத்தும் முறை"
கருத்துரையிடுக