சதாப்பு மூலிகையின் மருத்துவ குணங்கள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

 சதாப்பு மூலிகையின் மருத்துவ குணங்கள்



இலைச்சாறு 10 மிலி தாய்ப்பாலுடன் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல், இசிவு ஆகியவற்றைப் போக்கும். 

இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி உடலில் தேய்த்துக் குளித்துவர சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

இலையை பொடித்து வயதிற்கேற்ப ¼-1 தேகரண்டி தேனில் குழைத்துக் கொடுத்துவர வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச் சளி, பால்மாந்தம், மாந்தசுரம், கணை, வயிற்றுப்போக்கு தீரும்.

உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாய் சுவாசிக்க இருமல் தணியும்.

இலையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து வெண்ணையாய் அரைத்து வேளைக்கு 200-300 மிகி தாய்ப்பாலில் கலந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் , இசிவு ஆகியவற்றைப் போக்கும்

நிழலில் உலர்த்திய சதாப்பிலை, சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 40 கிராம், தனியா 250 கிராம், நன்கு பொடித்து சலித்து, சமன் கற்கண்டு பொடி கலந்து, தினம் 2-3 வேளை கொடுத்துவர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை அகற்றும். பெண்களுக்கு உண்டான உதிரச் சிக்கலையும், வயிற்றில் மரித்துப்போன கருவையும் வெளியாக்கும். சூதக சன்னி வாயுவினால் உருவாகும் வயிற்றுவலி, இசிவு முதலியவைகளுக்கு சிறந்த அவிழ்தமாகும்.

இச்செடியிலையை உண்டு பெருத்து வரும் புழுவை, புழு ஒன்றுக்கு 120மிலி ந.எண்ணை வீதம் விட்டு சூரிய புடமிட்டு,வடித்து 3-4 துளி ,5-6 நாள், தினமும் இருவேளை நாசியினுள் விட்டுவர  நாசியின் உட்புறத்தில்  இரணங்கள் ஆறும்.

மேற்படி தைலத்தை காதில் 1-2 துளி விட்டுவர மண்டையின் உட்கரப்பான், சீழ்வடிதல், காதுவலி, மந்தம், கர்ணவாதம் தீரும்.

0 Response to "சதாப்பு மூலிகையின் மருத்துவ குணங்கள்"

கருத்துரையிடுக