வீட்டு மருத்துவ குறிப்புகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

வீட்டு மருத்துவ குறிப்புகள்....!



௧. குழந்தைகள் தூங்கும் முன் நீர் அருந்தி விட்டு தூங்க பழகினால் பற்கள் சுத்தமாவதுடன், மலச்சிக்கலும் இருக்காது.

௨. பெண்களுக்கு அதிக இரத்தபோக்கு இருந்தால் தினமும் காலை வெறும் வயிற்றில் ஆறு செம்பருத்தி பூக்களை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

௩. மெலிந்த தேகம் உடையவர்கள் தினமும் இரண்டு வேளை கேழ்வரகு கஞ்சி, பால் சாப்பிட்டால் விரைவில் உடல் தேறும்.

௪. நீரிழிவு நோயாளிகளுக்கு புண்கள் ஏற்பட்டால் அதற்கு சிறிது வேப்பிலை, சிறிது அத்தி மரத்து இலை, சிறிது மஞ்சள் வைத்து நன்கு அரைத்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் படுக்கைக்கு போகும் முன் தடவினால் புண் ஆறிவிடும்.

௫. மூலச்சூடு உள்ளவர்கள் பாகற்காய் சாற்றை மோரில் கலந்து குடிக்க சூடு குறையும்.

௬. தலையில் அதிகமாக பொடுகு தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சைச் சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு எடுத்து தலையில் தேய்த்தால் பொடுகு நீங்கும்.

௭. நெஞ்சு எரிச்சல் அதிகமாக உள்ளவர்கள் பனை வெல்லத்தை நீரில் கரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கும்.

௮. வலிப்பு நோய் உள்ளவர்கள் அடிக்கடி ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வலிப்பு படிப்படியாக குறையும்.

௯. தலையில் முடி உதிர்ந்த இடத்தில் சின்னவெங்காயம், அல்லது செம்பருத்திப் பூவை அரைத்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

௧०. வாய் நாற்றம் உள்ளவர்கள் கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய், அவரைக்காய் முதலியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சரியாகும். கிராம்பை மெல்லுவது நல்லது.

                      நன்றி...... !

0 Response to "வீட்டு மருத்துவ குறிப்புகள்"

கருத்துரையிடுக