உடற்பயிற்சியின் முக்கியத்துவம் The importance of exercise

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...


*உடற்பயிற்சியின் முக்கியத்துவம்....


உடற்பயிற்சியின் முக்கியத்துவம் The importance of exercise
The importance of exercise




இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும்தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால்!, உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை...

மேலும், பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்...

ஆகவே!,  உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன...

சில உடற்பயிற்சிகள் உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது...

நாளும் முப்பது முதல் நாற்பத்தைந்து  மணித்துளிகள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், நலமாகவும் இருக்கும்...
மேலும், மன நிலையையும் நன்றாக வைக்க உதவுகிறது.  புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது...

இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு...

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப் பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், கவலைகளும் நீங்கும்...
பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது...


*வளமான உடல் எடையோடு இருப்பதுதான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடும் அழகாகவும் இருக்கும்...!

*உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கிறது. அதிலும், நாளும் உடற்பயிற்சி செய்தால், குருதியில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்...

 *உயர் இரத்த அழுத்தத்தை ‘அமைதியான கொலைகாரன்’ என்றும் அழைப்பர். உயர் இரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக உயிர்காற்று (ஆக்சிசன்) கிடைக்கும்....

*இதனால் இரத்தக் குழாய்கள், ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும். உடற்பயிற்சி செய்வதன் முக்கிய காரணம் என்னவெனில், நமது வாழ்நாள் அதிகரிக்க இது உதவுகிறது. 
உடலும், மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்....


                      நன்றி......

0 Response to "உடற்பயிற்சியின் முக்கியத்துவம் The importance of exercise"

கருத்துரையிடுக