வெற்றிலையின் நன்மைகள் Benefits of Betel

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...


**வெற்றிலை.....

வெற்றிலையின் நன்மைகள் Benefits of Betel
 Benefits of Betel



*உலகெல்லாம் "கொரோனா (COVID-19)" ஆட்டிவைக்கும் பொழுது ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் மிக மிக குறைவு  இவ்வளவுக்கும் அங்கு அதிக கெடுபிடிகள் இல்லை,
அரசுகளே முதலில் நிலையாக இல்லை...

*ஆனாலும் அந்நாடுகளில் கொரோனா(COVID-19) கட்டுபாட்டில் இருக்க அல்லது வேகமாக பரவாமல் இருக்க என்ன காரணம் என ஆய்வுகள்  மவுனமாக நடக்கின்றன, அதில் ஒரு சில முடிவுகள் ரகசியமாக தெரிகின்றன‌!

*ஆம்!....
 இப்போது கொரோனா(COVID-19) கட்டுபாட்டில் இருக்கும் அல்லது பரவ தயங்கும் நாடுகளில் ஒன்று "மியான்மர் எனும் பர்மா"......

*அங்கு பெரும் போராட்டம், கிளர்ச்சி மக்கள் திரள், என பெரும் குழப்பம் நிலவும் பொழுது, அரசு என்பது இயங்காமல் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரியும் பொழுதும் கொரோனா(COVID-19) பெரிதும் பரவவில்லை!

*இதன் முக்கிய காரணம் பர்மியர்களின் முக்கிய விசயமான வெற்றிலை அல்லது நம் பாசையில் 'தாம்பூலம் தரித்தல்' என்கின்றது ஆய்வு...

*வெற்றிலை, பாக்கு மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை என்றோ கண்டவர்கள் நம் முன்னோர்கள்,..
ஆனால், நாகரீகம்!.. பற்களின் வெண்மை போய்விடும்  என சொல்லி நம்மை நாமே கெடுத்தும் கொண்டோம்.

*வெற்றிலை மெல்லுவது தாம்பூலம் தரித்தல்' என தமிழரின் உணவு பழக்கமாய் இருந்தது,...
தமிழர் ஆண்ட பர்மாவிலும் அது வழக்குக்கு வந்தது, இப்பொழுது தமிழர் அதை விட்டுவிட பர்மியர்கள் தொடர்கின்றார்கள்....

*அக்காலத்தில் வெற்றிலை, பாக்கு,  சுண்ணாம்பு, கிராம்பு, ஏலம், மிளகு கலந்து மெல்வார்களாம்...

 *வெள்ளையன் வந்து கிராம்பு, ஏலம், மிளகு, எல்லாம் கடத்தி,
 நமக்கு புகையிலையினை மெல்ல சொல்லி, கொல்ல தொடங்கினான்,
 அன்றிலிருந்து வெற்றிலை மெல்லும்  பழக்கம் விடுபட்டு போயிற்று. உடல் நலம் காக்கும் அந்த அற்புத வழக்கம், 'போதை பழக்கம்' என பழிக்கப்பட்டு ஒழிக்கபட்டது.

*புகையிலை கலந்து வெற்றிலை மெல்ல வைக்கும் விசக்காரியத்தை வெள்ளையன் தொடங்கி வைத்தான்,
 1980களின் பிற்கால கிழவிகள் கூட புகையிலையைதான் பழகினார்கள், 

*வெற்றிலை தாம்பூலத்தில் மிளகு சேர்ப்பது 1800களிலே விடைபெற்றது...

*இன்றும் கிராமங்களில் பாம்பு கடிக்கு வெற்றிலையும் மிளகும் கடித்து விழுங்க சொல்லுவது வழக்கம். ஆம் பாம்பு கடி விசத்தை முறிக்குமாம்.  
"வெற்றிலையும் பத்து  மிளகும் இருந்தால், பகைவன் வீட்டுக்கும் உண்ண செல்லலாம்" என்பார்கள்....

*வெற்றிலை, மிளகு கொரோனாவினை விரட்டும் என சொல்லவில்லை!......
அது நிரூபிக்கபடவுமில்லை
 ஆனால்,  வெற்றிலை பழக்கம் உள்ள இடங்களில் கொரோனா குறைவு...

*கொரோனா என்றல்ல,
 பொதுவாகவே தாம்பூலம் தரித்தல் எனும் வெற்றிலை பழக்கம் நல்லது, *வெற்றிலை நலம் கொடுக்கும்,
*பாக்கு (சீவல்) துவர்ப்பாய் உடலுக்கு சக்தி கொடுக்கும்,*
 *சுண்ணாம்பு எலும்புக்கு பலம்,
இதில் மிளகும் சேர்த்தால் மிக்க நல்லது...

*மிளகு இல்லாத தாம்பூலம் பலனற்றது.
இதை பழகிகொள்ளுதல் ஒன்றும் தவறல்ல.  நாகரீகம் என ஒதுக்கிவிட முடியாத ஆரோக்கிய பழக்கம் இது.

*இப்பொழுதெல்லாம் வெற்றிலை மெல்பவர்கள் அரிது.
 ஒரு பெட்டிகடையிலும் இப்பொழுது வெற்றிலை இல்லை, ஏதோ ஆலய வழிபாடு, திருமண‌ தாம்பூல தட்டுகளில் என காட்சியளிக்கின்றது. 

*வெற்றிலை, பாக்கு இருந்த  கடைகளிளெல்லாம் இப்பொழுது 
 டீ, பெப்சி, சிகரெட் என நிரம்பி வழிவது ஆரோக்கிய கேட்டின் முதல்படி.
நம்மை நாமே கெடுத்துக்கொள்கின்றோம், 
முன்னோர் சொன்ன வழி தவறி,
நாசமாகி சாகின்றோம்...

*ஒவ்வொரு நோய்க்கும்
 நம் முன்னோரின் பழக்க வழக்கம், உணவினை நினைவுபடுத்தி செல்வது போல, 
 கொரோனா.. வெற்றிலை வழக்கம், மிளகு ரசம் என சொல்லிகொள்கின்றது, கூடவே சுத்தம் மற்றும் உணவு,
முன்பு தமிழக ஆலயங்களிலும் வீடுகளிலும் கடைபிடிக்கபட்ட, அதாவது, தமிழ்மதம் சொன்ன சுத்தமும் உணவும்....

               எளிதில் அடங்கிவிடும் என எதிர்பார்க்கபட்ட கொரோனா அடங்கவில்லை
 விசுவரூபமெடுத்து உலகை மிரட்டுகின்றது.  மருத்துவர்களையும் அவர்களை தாண்டி இறைவனையும் நோக்கி வணங்கிகொண்டிருக்கின்றது இந்த  உலகம்..

*நம் முன்னோர்களின் பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கிய உணவினை தேடுங்கள்.
 அதிலே 90% நோய்த்தடுப்பு, முன் எச்சரிக்கை இருக்கின்றது.

*மிக சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்
தமிழக  ஆலயங்களிலும் அவர்கள் சம்பிரதாயங்களிலும் எதெல்லாம் உணவு, காணிக்கை, படையல் , சமர்ப்பணம் என வைக்கப்படுமோ அதெல்லாம் நோய் தடுக்கும் விசயங்கள், என சொல்லலாம்...

*அதிலும் வெற்றிலை  முதலிடத்தில் இருக்கின்றன....
எல்லா கடவுள் முன்பும் வெற்றிலை வைக்கப்படுவதும்,
 'வெற்றிலை மாலை' சாற்றப்படுவதும்,  'பிரசாதமாக வெற்றிலை தரப்படுவதும் அதனாலே....

*ஒவ்வொரு நோயும் மறைந்துவிட்ட நம் பழங்கால நல்ல உணவு பழக்கங்களை, நல்ல உணவினை, நல்ல மூலிகை தரிப்பினை நினைவுபடுத்திகொண்டேதான் இருக்கும்!....

அப்படி,  இந்த கொரோனா
வெற்றிலை மற்றும் வேப்பிலையின் மகத்துவத்தை சொல்ல வந்ததே அன்றி வேறல்ல‌!.....

முடிந்தால் வெற்றிலையை சாப்பிட முயற்சி செய்யுங்கள்!......

                       நன்றி!...........


        தமிழ் வாழ்க!  தமிழ் வளர்க!....

0 Response to "வெற்றிலையின் நன்மைகள் Benefits of Betel"

கருத்துரையிடுக