கோவைக்காயின் மருத்துவ குணங்கள் Medicinal properties of cocaine

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

கோவைக்காய்..

கோவைக்காயின் மருத்துவ குணங்கள் Medicinal properties of cocaine
Medicinal properties of cocaine

*வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்................

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் நல்ல மருந்தாகும். கோவைக்காய்  இலையின் சாறானது    பித்தம்,  சயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

      கரம் மசாலா அல்லது சூட்டைத் தரும் மருந்துகளால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல  மருந்தாக  கோவைக்காய் உள்ளது.......

 பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய்க்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்றுதான் கோவைக்காய்.    
 தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.
 
  கோவைக்காய் பச்சடி  சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து செய்தால்  அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார்.

 
          பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.  ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் பலன்கள் கிடைக்கும்.
 
கோவைக்காயின் இலை மற்றும் தண்டு   கபத்தை வெளியேற்றும்.
 இலை மற்றும்  தண்டுகளை கசாயம் வைத்து குடித்து வர  மார்புச்சளி மற்றும்  சுவாசக்குழாய் அடைப்பு ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாக இருக்கும்.
இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து பூச  புண்கள் மற்றும் பிற தோல்நோய்களை குணப்படுத்த முடியும்...


                          நன்றி....................

0 Response to "கோவைக்காயின் மருத்துவ குணங்கள் Medicinal properties of cocaine"

கருத்துரையிடுக