நரம்பு சுருட்டலுக்கு சித்தமருத்துவத்தின் சிகிச்சை முறைகள்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
நரம்பு சுருட்டலுக்கு சித்தமருத்துவத்தின் சிகிச்சை முறைகள்
* மஞ்சள் ஒரு தேக்கரண்டி, கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு 3 துண்டு இவற்றை சேர்த்து, சோற்றுக் கற்றாழையுடன் நன்கு அரைத்து நரம்புச் சுருட்டலுக்கு மேல் பூச்சாக, தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பூசிவர, நரம்புச்சுருட்டல் வலி குறைந்து பலன்கள் தெரியும்.
* பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும் . இந்த பழச்சாற்றை தினமும் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோசு வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம். இதை தினமும் சரியான முறையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.
* சுத்தமான களிமண் / எறும்பு / கரையான் புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.
* மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் முடக்கற்றான் தைலம் / பிரண்டைத் தைலம் என பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாச் செய்தால் படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.
* இரத்தத்தை சுத்திகரிக்கும் மூலிகைகளான குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் நரம்புச்சுருட்டலுக்கு தீர்வாகின்றன.
* புங்க எண்ணை அல்லது புங்கன்கொட்டை பொடி, விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
* நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக விளங்குவது, தண்ணீர்விட்டான் கிழங்குகளே தனிப்பெரும் சிறப்பு மிக்க தண்ணீர்விட்டான் கிழங்குகளை நன்கு இடித்து சாறெடுத்து, தினமும் பருகிவர, நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் யாவும் விலகி, உடல் நலம்பெறும்.
வாழ்க வளமுடன்.......!
நன்றி........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "நரம்பு சுருட்டலுக்கு சித்தமருத்துவத்தின் சிகிச்சை முறைகள்"
கருத்துரையிடுக