ஆடாதொடையின் மருத்துவ குணங்கள்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
ஆடாதொடை :
ஆடாதோடைக் கிரந்த பித்த மறுங்காச
மானந்த வாயுவுடன் மேலிளைப்பு மேகம்
சூடாகும் தாபசுரம் பித்தகப வாத
சுரரோகஞ்சந்நிவாதஞசூலை குட்டம்
ஓடாவோ வாந்திவிக்கல் மூலரோகம்
ஒளிதோடம் உட்கனலும் ஒழியுந்தானே
வாடாது மனக்கிளர்ச்சி யாகுமிதன் பெருமை
வகுத்துரைத்தார் முன்னோர்கள், வாழ்ந்திட யாவருமே.....!
ஆடாதொடை யால் இருமல்,
இளைப்பு நோய், சுரம்,
காமாலை ஆகியன நீங்கும்.
தொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை.
ஆடாதோடையானது குத்துச்செடி (புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.
ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.
- என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும். (Adhatoda vasica) என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை:. இச்செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆடாதோடையின் சிறப்புகள் :
நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கசாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை ஆடாதோடை குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது, நாம் கசாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர். இந்த குடீநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்.
ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்..........!!
ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும்.
ஆடா தொடை இலையை குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.
இதன் இலைச்சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் ஒரு டம்ளரில் கலந்து இரண்டு வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.
ஆடா தொடை இலை பத்து எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம், இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.
ஆடா தொடை இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
ஆடா தொடை இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விசம் முறியும்.
ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விசம் குணமாகும்.
ஆடா தொடை இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.
நன்றி.........!
வாழ்க.....! வளமுடன்......!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "ஆடாதொடையின் மருத்துவ குணங்கள்"
கருத்துரையிடுக