சினைப்பை நீர்க்கட்டி குணமாக

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

சினைப்பை நீர்க்கட்டி குணமாக.........!



சினைப்பை நீர்க்கட்டி :
 
௧. பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம்.

௨. பெரும்பாலும் இன்று சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன. 

    சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது.
 
௩. கரு முட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாத விடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.

௪.  பாலி சிட்டிக் ஓவரி, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், குறைந்த-கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

௫. இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் கார்மோன்களைச் சீராக்கி இந்த (PCOD) பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி ஒரு  தேக்கரண்டி  அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.

௬. மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். 
 
சிறிய வெங்காயம் தினசரி ஐம்பது கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் (pcod) பிரச்சினையை போக்கிட உதவும்.

௭. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.


சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைக்குக் காரணம் என்ன..........?

அ.  சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். 
 
ஆ. சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப் பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. நவீன மருத்துவமும் இதற்கு "கைப்பர் இன்சலினிமியா' என்று வைத்துள்ளார்கள்.   இதற்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள்.



இதற்கான உணவு முறை என்ன.........?

க. பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ('குறைந்த  கிளைசமிக் உணவு') சாப்பிட வேண்டும். 
 
கா. கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும். 

கி.  சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.



மீசை வளர்வது ஏன்...........?

      சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் கார்மோனாகிய டெசுடோசு டீரோன் அதிக அளவில் சுரக்கும். இதனால் தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது. 

     சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.


                        நன்றி............!

            வாழ்க வளமுடன்..........!
     

0 Response to "சினைப்பை நீர்க்கட்டி குணமாக"

கருத்துரையிடுக