மூட்டுவலிக்கு முன்னோர்களின் மூலிகை வைத்தியம் Herbal remedies of ancestors for arthritic pain
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
மூட்டுவலிக்கு முன்னோர்களின் மூலிகை வைத்தியம்........
வேலிப்பருத்தி இலையை இரண்டு கைப்பிடி அளவு பறித்து அதை நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, ஒரு கைப்பிடி அரைக்காத வேலிப்பருத்தி இலை மேலே இந்த விழுதை வைத்து இதற்குமேல் ஒரு கைப்பிடி அரைக்காத வேலிப்பருத்தி இலையை வைத்து இதை அடை போல தட்டிக்கொண்டு,
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேலிப்பருத்தி இலையால் செய்த அடையை இட்லித் தட்டில் வைத்து மேல் மூடி போட்டு இதை இருபது நிமிடம் நீராவியில் வேகவைத்து இதில் சாறுபிழிந்து,
இந்தச் சாற்றை காலை வெறும் வயிற்றில் பத்து மில்லி அளவு குடித்து வந்தால் நாள்பட்ட மூட்டுவலிகள் அனைத்தும் பத்தே நாட்களில் நிரந்தரமாக குணமாகிவிடும்.
*மூட்டு வலிக்கு மூலிகை பற்று :
வேலிப்பருத்தி இலை வேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்து வலியுள்ள மூட்டுகளில் மேல் பற்றாக போட்டுவர மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கமும் மூட்டுவலியும் ஒரு வார காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நிரந்தரமாக குணமாகிவிடும்.
*மூட்டு வலிக்கு மூலிகை ஒத்தடம் :
தொட்டால் சிணுங்கி இலையை இரண்டு கைப்பிடி அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இதை கொதி
வரும் வரை வேகவைத்து இந்த நீரினை ஒரு துணியில் நனைத்து மூட்டு வலிகளுக்கு ஒத்தடம் கொடுத்தால் மூட்டுகளில் இருக்கும் வீக்கமும் மூட்டு வலியும் முழுமையாக குணமாகும்.
*மூட்டு வலிக்கு பச்சிலை கட்டு :
தழுதாழை இலை நொச்சி இலை எருக்கு இலை மூன்றையும் சமமாக அரைத்து மூட்டுக்களில் மேலே பூசி இதன் மேலே ஒரு துணியை சுற்றி கட்டு போட்டு வைத்துவிட வேண்டும்.
இந்த மூலிகை கட்டு மூன்று மணி நேரம் வைத்திருந்தால் போதும் இந்த வைத்திய முறையை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் எப்பேர்பட்ட மூட்டுவலியும் முழுமையாக குணமாகி விடும்.
*மூட்டுவலியை குணமாக்கும்
மூலிகை தேநீர் :
தோல் நீக்கிய ஐந்து கிராம் சுக்கு அதே அளவு வெள்ளைப் பூண்டு இவை இரண்டையும் ஒன்றிரண்டாக இடித்து 150 மில்லி தண்ணீரில் கலந்து 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குணமாகும் மூட்டு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் தீரும்.
உடலுக்கு சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் உண்டாகும் வாதநோய்கள் எந்த வயதிலும் நம் உடலுக்கு வராதபடி நமது உடலை காக்கும்
*மூட்டுவலிக்கு மூலிகைச்சாறு :
தழுதாழை இலையை இடித்து சாறு பிழிந்து இதில் இருபது மில்லி எடுத்துக்கொண்டு இதிலே ஐந்துமில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வர தீராத மூட்டு நோய்கள் தீரும் மேலும் வாதத்தால் வருகின்ற அனைத்து வியாதிகளும் உடலை விட்டு நீங்கும்.
இதை காலை ஆறு மணிக்கு சாப்பிட்டால் பத்து மணி வரையிலும் வேறு எந்த உணவையும் சாப்பிட கூடாது.
நன்றி...........
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.

0 Response to "மூட்டுவலிக்கு முன்னோர்களின் மூலிகை வைத்தியம் Herbal remedies of ancestors for arthritic pain"
கருத்துரையிடுக