நன்னாரியின் மருத்துவ பலன்கள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...


நன்னாரியின் மருத்துவ பயன்கள்..............
Medical Benefits of Nannari



 * நன்னாரியானது குறுகிய, நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடி இனம். இதில் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ குணம்  உடையது. நன்னாரிக்கு நறுக்கு மூலம், நறு நீண்டி போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

*தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்கவிளைவுகள் இல்லை. 
 நன்னாரி என்றாலே சர்பத்துதான் நினைவுக்கு வரும். இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.

 *நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும். நன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் கலந்து  சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.

*நன்னாரி வேர் சூரணம் -அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கலந்து எடுத்துக் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும்.



*நன்னாரி வேரை இடித்து சூரணம் செய்துகொண்டு,  அதற்கு சமமாக  சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 35 கிராம் - 50 கிராம் வீதம் 2 வேளை 7 நாட்கள் சாப்பிட  செரியாமை, அக்கினிமந்தம், வெள்ளை, கீல் பிடிப்பு, பிரமேகம் ஆகிய நோய்கள்  தீரும்.

*பச்சை நன்னாரி வேர் -5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி பாலில் கலந்து  சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
 நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

*வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில் வெல்லம், எலுமிச்சை சாறுகலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.


                            நன்றி🙏🏼...............

        தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!.....
முடிந்தவரை தமிழிலேயே பேசுவோம், தமிழிலேயே எழுதுவோம்.....

                                              இப்படிக்கு,
                                                மு.குமார்

0 Response to "நன்னாரியின் மருத்துவ பலன்கள் "

கருத்துரையிடுக