மகளிர் இரத்தச் சோகை தவிர்க்கும் வழிமுறைகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

மகளிர் இரத்தச் சோகை  தவிர்க்கும் வழிமுறைகள்...........



               அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிவரும் காலம் இது. அதே நேரத்தில் அவர்களைத் துரத்தும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் இரத்தச்சோகை நோயின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கான இரண்டு முக்கியக் காரணங்கள், மாதவிலக்கு மற்றும் மகப்பேறு. இக்காலக் கட்டங்களில்தான் இரத்தச் சிவப்பு அணுக்கள் பெண்களுக்குக் குறையத் தொடங்கும். இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவதால் பீட்டா தலசீமியா, பெருஞ்செல்சோகை போன்ற நோய்களும் ஏற்படும். 

             18 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்குத் தீவிரமான இரத்தச்சோகை இருக்கிறது என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 8.4 சதவிகிதம் பேருக்கு பீட்டா தலசீமியா இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதற்குக் காரணம், மார்பகக் கோளாறுகளால் ஏற்படும் இரத்தச்சோகை. 

*பெண்களை இடைவிடாது துரத்தும் பிரச்னை   இரத்தச்சோகை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் உருவாகக்கூடியது. இந்தச் சிவப்பணுக்கள் தான் ஆக்சிசனை நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு எடுத்துச்செல்லும் வேலையைச் செய்கிறது. சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது, உடலின் உள்ளுறுப்புகளுக்குச் செல்லும் இரத்தத்தில் தடை ஏற்படுகிறது. 

*காரணம் :

       இது உருவாகக் காரணம், இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவது தான். சோர்வு, வாழ்க்கை முறை மாற்றமும் காரணமாக இருக்கிறது. 

*அறிகுறிகள் :

             * உடல் பலவீனம்
             * சோர்வு
             * மூச்சுத்திணறல்
             * கை, கால்கள் குளிர்ந்து   போதல்
             * சீரற்ற இதயத்துடிப்பு
.            * உள் ரத்தக் கசிவு
             * நகங்கள் பிளவுறுதல்
             * சருமம் வெளுத்துப் போதல்.
             * உடல் சோர்வு 

*அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.....

              * மகப்பேறு அடையக்கூடிய வயதை எட்டிய பெண்கள்
              * கர்ப்பிணிகள்
              * சத்தான உணவைச் சாப்பிடாதவர்கள்
              * அடிக்கடி இரத்ததானம் செய்பவர்கள்
              * கைக்குழந்தைகள்
              * குறைமாதத்தில் பிறந்தவர்கள்
              * வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்
              * அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள். 

*இதன் வகைகள் :

௧. இரத்த இழப்புக் காரணமாக வருவது   :

               வயிறு, குடல் சம்பந்தப்பட்டப் புண்கள், மூலம், இரைப்பை அழற்சி, வயிற்றில் திசுக்கள் பாதிப்பு, புற்றுநோய், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் குழந்தைப் பிறப்பில் பிரச்னை போன்றவை ஏற்படும். 

௨. குறைந்த அல்லது தவறான இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியால் வருவது :

          இரும்புச்சத்துக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, எலும்பு மஞ்சை  மற்றும் செல்களில் பிரச்னை போன்றவை ஏற்படும். 

௩. மற்ற உடல்நிலை காரணங்களால் வருவது :

         முற்றிய, தீவிர சிறுநீரக நோய், தைராய்டு சுரப்புக் குறைவு, புற்றுநோய், நோய்த்தொற்று, தோல் முடிச்சு நோய் (Lupus), சர்க்கரைநோய் மற்றும் மூட்டழற்சி நோய்கள் போன்றவை ஏற்படும். 

௪. இரத்தச் சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதால் ஏற்படுவது :

      பரம்பரை நோய்களான அரிவாள் அணு இரத்தச்சோகை, தலசீமியா, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் காரணமாக ஏற்படும் நச்சுப் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சத்துக் குறைவு, கர்ப்பிணியின் கருப்பையிலுள்ள கரு பாதிப்பு, பிறவி சிவப்பணு அழிவுச் சோகை நோய், இரத்த உறைதல் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உண்டாகும். 



*பெண்களின் கவனத்திற்க்கு.......

           வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பெண்களாக இருந்தாலும் சரி, சிறிய  உடல் உபாதை என்றாலும், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். 


* பெரும்பாலான இரத்தச்சோகைக்குக் காரணம், 'இது இரத்தச்சோகை' என்று அறியாமல் இருப்பதே. 

* உடலில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், இது இயல்பானது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். 

* உடல்நிலை சரியில்லாது போவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், நீண்டகாலமாக ஒரே அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது. 

    இரத்தப் பரிசோதனையின்போது இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் சிவப்பணு நிறப்பொருள், அணுக்கூறுகள் போன்றவற்றின் தகவல்கள் தெரிவிக்கப்படும். ஆயினும், ஒரு முழுமையான பரிசோதனையின் மூலம் இரத்தச்சோகைக்கான காரணமும் சேர்த்து கண்டறியப்படும். 

*தவிர்க்க...... தடுக்க..........

* இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம். 

* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். 

* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

* இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டுவர இதைத் தடுக்கலாம். 

* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மிக்சியில் அரைத்துச் சாறாகக் குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 

* தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப் பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

* தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம்,  பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.


                        நன்றி.......!

               வாழ்க  வழமுடன்........!

0 Response to "மகளிர் இரத்தச் சோகை தவிர்க்கும் வழிமுறைகள்"

கருத்துரையிடுக