கால் ஆணியா வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
கால் ஆணியா.......…? வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்....…..!
காலில் ஏற்படும் அலர்ச்சி, காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.
காலில் ஆணி வந்து விட்டால், பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
★ இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும்......!
கால் ஆணியினால் ஏற்படும் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே காணப்படும்.
அந்த அறிகுறிகளுள் அடங்குபவை :
கடினமான தோல்,
பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாக தோற்றமளித்தல்.
பாதிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் ஏற்படுதல். நடப்பதில் சிரமம் ஏற்படுதல்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே, பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
அம்மான் பச்சரிசி செடியை சிறிது சிறிதாக உடைத்து அதில் வரக்கூடிய பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.
சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா… மூன்று நாட்களில் குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா… ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, புண் வந்த இடத்துல பூசினால் புண் ஆறிவிடும். கால் ஆணியும் காணாமல்போய்விடும்.
கொய்யா இலையை பயன்படுத்தி கால் ஆணிக்கான மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன், கொய்யா இலை பசை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை கால் ஆணி மீது பூசிவர பிரச்னை சரியாகும்
கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.
வேப்பிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்னை சரியாகும். குப்பைமேனி, வேப்பிலை ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டவை.
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
ஐந்து கிராம் மஞ்சள், ஐந்து கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடலாம்.
அதிமதுரத்தை கடுகு எண்ணெயில் உரைத்துப் போடலாம். ஆமணக்கு எண்ணெயையும் இதற்கு பயன்படுத்தலாம்.
நன்றி.............!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "கால் ஆணியா வேரோடு எடுக்கும் வைத்திய முறைகள்"
கருத்துரையிடுக