நுரையீரல் கோளாறுகளைத் தீர்க்க உதவும் சீரகம்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

        நுரையீரல் கோளாறுகளைத் தீர்க்க உதவும் சீரகம்........…!



     நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பாரம்பரிய மருந்தாக சீரகம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

         சீரகம் விதைகளின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, சீரகம் அதன் தனித்துவமான சுவையை பல்வேறு இந்திய கறிகளுக்கு வழங்குகிறது. இது அரிசி மற்றும் பயறு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது. அவசியமான மசாலாப் பொருட்களில் சீரகமும் ஒன்றாகும்.

        நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் சீரகமும் ஒன்று. இந்த சீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது. இந்த சீரகத்தின் பயனை இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவருமே நன்கு அறிவர்.

      சீரகம் பார்ப்பதற்கு ஓமம் போன்று இருந்தாலும், இதன் வாசனை மற்றும்  சுவை வேறுபட்டு காணப்படும்.

       வறுத்த சீரக பொடி 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். கால் டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து கால் டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து தினமும் 1 முதல் 2 முறை குடிக்கவும். சீரகத்தில் உள்ள அலர்ச்சி  எதிர்ப்பு பண்பு & பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமக்கு ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது.  

       நோயற்ற வாழ்வே.......! குறைவற்ற செல்வம்...........!                                                                                              
                         நன்றி...........!

0 Response to "நுரையீரல் கோளாறுகளைத் தீர்க்க உதவும் சீரகம்"

கருத்துரையிடுக