பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...

பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம்.....…………



◆ வில்வப் பழத்தில் பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. வில்வப் பழமும், எள் எண்ணெயும் சேர்த்த தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.


 ◆ வில்வக் காயை வெயிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் சரியாகும்.

◆ வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆசுதுமா குணமாகும். 



◆ வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி சரியாகும். 

◆ வில்வ வேர், தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளை என தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடல் அழகு பெற்று சருமம் பளபளப்பாகும்.



◆ வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கட்டுப்படுத்தும். 
                                                      

                                                        
◆ வில்வப் பழம் வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.


◆ வில்வ பழத்தின் சதையை மூன்று பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் குடித்து வந்தால், மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும்.



◆ வில்வ வேர், நோய்களை  நீக்கி உடல் தேற்றும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். ரத்தக் கசிவை நிறுத்தும்.

                "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

                                நன்றி............!

0 Response to "பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்ட வில்வம்"

கருத்துரையிடுக