வாயுத் தொல்லை நீங்க இயற்கை முறையில் வைத்தியம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
வாயுத் தொல்லை நீங்க இயற்கை முறையில் வைத்தியம்.............!
◆ வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு சிறிதளவு பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிட வேண்டும்.
◆ இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் மோர் குடிக்கவும். இதனால் வாயு, வயிற்றுப் பொருமல் குணமாகும்.
◆ இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவை மூன்றும் வாயுப் பிடிப்பை நீக்கும் மருந்து.
◆ புதினா துவையல் அல்லது புதினா பொடியை சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.
◆ வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பறந்துவிடும்.
◆ அசீரணம், வயிற்று வலி, வாயு இவை மூன்றும் குணமாக குப்பைமேனி இலையை காயவைத்து, பொடி செய்து காலையும் மாலையும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.
◆ வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
◆ தினமும் பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது. இது சீரண சக்தியையும் தூண்டும்.
◆ சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
நன்றி................!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "வாயுத் தொல்லை நீங்க இயற்கை முறையில் வைத்தியம்"
கருத்துரையிடுக