பித்தப்பையில் கற்கள் ஏன் உருவாகின்றன
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
பித்தப்பையில் கற்கள் ஏன் உருவாகின்றன……….…!
சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன.
ஏன்...?
பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும்.
பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.
இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.
காரணம்………!
1. உடல் பருமன்
2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.
3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.
4. பரம்பரைக் கோளாறு.
5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.
6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.
8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.
9. கார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோசன் கார்மோன் அதிகமாகச் சுரப்பது.
10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.
11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.
12. அடிக்கடி விரதம் இருப்பது.
13. கர்ப்பம்.
14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.
15. ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.
இவைகளால் பித்தப்பையில் கற்கள் ஏற்படக் கூடும்.
பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதில் ஒன்று, பித்தநீரில் கொலட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்பு கற்கள்' என பெயர்.
நன்றி.........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "பித்தப்பையில் கற்கள் ஏன் உருவாகின்றன"
கருத்துரையிடுக