எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் எது தெரியுமா
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் எது தெரியுமா....?
ஆரோக்கியமான சத்துக்களுள் ஒன்றுதான் கால்சியம். உடல் ஆரோக்கியம், பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிக இன்றியமையாதது. இந்த பதிவில் கால்சியம் நிறைந்த உணவு வகைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.....
*அத்திப் பழம் (Figs) :
அத்திப் பழத்தை புதியதாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம். அத்தி பழத்தில் கால்சியம் மற்றும்
தாதுக்கள் நிறைய அடங்கியுள்ளன. நமது சீரண சக்திக்கு இதில் உள்ள நார்ச்சத்துகள் உதவுகிறது.
*ஆரஞ்சு பழம் (Orange) :
ஆரஞ்சு பழத்தில் கால்சியம் உள்ளது. ஆகவே காலையில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலை வலிமையாகும்.
*சோயா பால் (Soy milk) :
பால் பிடிக்காதவர்கள் அதற்கு பதிலாக சோயா பால் அருந்தலாம். பாலில் உள்ள அனைத்து சத்துக்களும் சோயா பாலில் உள்ளன. 100 மில்லி லிட்டர் சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது.
*கேழ்வரகு (ragi) :
கேழ்வரகில் மற்ற தானியங்களை விட அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. கேழ்வரகில், அரிசியில் இருக்கும் கால்சியம் அளவை விட 30 மடங்கு அதிகமாகவும், 10 மடங்கு நார்ச்சத்து அதிகமாகவும் கொண்டுள்ளது. நீங்கள் எடையை குறைக்க நினைத்தாலும் அதற்கும் இது ஒரு சிறந்த உணவாக அமையும்.
நன்றி.............
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் எது தெரியுமா"
கருத்துரையிடுக