சோம்பு வைத்தியம்
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...
உடலில் உள்ள மலத்தை நீக்கி உடல் நலத்தை காக்கும் சோம்பு வைத்தியம்
சோம்பு சூரணம்......!
சோம்பு எனும் பெருஞ்சீரகத்தை இளஞ்சூட்டில் லேசாக கருகாத வண்ணம் வறுத்து சூரணம் செய்து கொண்டு,
இதன் எடைக்கு சம அளவாக சீனி சர்க்கரையை இதனோடு சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து தினம் இருவேளை ஆறிய வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலி குணமாகும் மேலும் வயிறு மற்றும் குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும் விலகும்.
சோம்பு சூரணத்தை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதனால் கிடைக்கின்ற பயன்களைப் பார்ப்போம்..........
அசீரணக் கோளாறுகள் நீங்கும்.
சுவாச தொந்தரவுகள் விலகும்.
யோனி சார்ந்த ரோகங்கள் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் உடலில் வருவதை தடுத்து நிறுத்தும்.
குரல் கம்மல் குணமாகும். மூக்கடைப்பு மற்றும் பீனிசம் போன்ற சுவாச நோய்கள் தீரும்.
உடலிலுள்ள கபத்தை நீக்கும்
இருமல் நோய் நிவர்த்தியாகும்.
மேலும்,
உடலில் உள்ள மலத்தை நீக்கி உடலுக்கு நலத்தை தரும் நல்ல மருந்து சோம்பு என சொல்லலாம்
சோம்பு கசாயம்......!
சோம்பு எனும் பெருஞ்சீரகத்தை பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து பனிரெண்டு மணி நேரம் ஊறவைத்து ஊறிய பின் இதை அடுப்பிலிட்டு சிறு தீயில் எரித்து இதை இருநூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி இதில் நூறு மில்லி எடுத்து காலை உணவிற்கு முன்பு சாப்பிட்டு வேண்டும் மீதமுள்ள நூறு மில்லி சோம்பு கசாயத்தை காலை உணவு உண்ட பின் முப்பது நிமிடம் கழித்து சாப்பிட்டு வர வேண்டும்.
இதனால் கிடைக்கின்ற மருத்துவ பயன்கள்......
பழைய மலக்கட்டு நீங்கும்.
மலம் சிரமமின்றி வெளியேறும்.
உடல் எடை குறையும்.
தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
உடல் பலவீனத்தால் ஏற்படும்
களைப்பு மற்றும் அசதி நீங்கும்.
உடலுக்கு புதிய உற்சாகமும்
உடலில் வலிமையும் ஏற்படும்.
மூட்டு வலி மற்றும் உடல் வலியைப் போக்கும்.
முடக்கற்றான் மற்றும் சோம்பு கசாயம்
ஒரு கைப்பிடி முடக்கற்றான் இலையுடன் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சோம்புவை சேர்த்து இருநூறு மில்லி நீருடன் கலந்து இதை நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி இதில் துவரம் பருப்பை வேகவைத்த பருப்பு கீரை ஐம்பது மில்லியளவு கலந்து இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தீராத உடல் வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
மேலும், முடக்கற்றான் கசாயத்தை பருகி வருவோருக்கு.....
செரிமான கோளாறு மற்றும் குடல் சார்ந்த நோய்கள் மேலும் வயிற்று உப்பிசம் போன்ற நோய்கள் குணமாகும்.
நன்றி........!
Link will be apear in 20 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
0 Response to "சோம்பு வைத்தியம்"
கருத்துரையிடுக